திட்டம்-1

  1. இந்த சேமிப்புத்திட்டத்தின் சேர்க்கைப் படிவத்தில் தாங்கள் கையொப்பமிடுவதன் மூலம் இந்த திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் 2. நிபந்தனைகளை தாங்கள்3. படித்துவிட்டதாகவும் அதனை 4. ஏற்றுக்கொள்வதாகவும் 5. ஒப்புக்கொள்கிறீர்கள்.
  2. இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கான ஒரு னித்துவமான தங்க நகை சேமிப்புத் திட்டமாகும்.இத்திட்டத்தின்கீழ் 11 மாதங்கள் முடிவடைந்த பிறகு 12-ம்
    5000 மாதத்தில் தங்க நகைகளை 15% வரை சேதாரமின்றி (Value Addition) பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கான G.S.T. வரியை வாடிக்கையாளர்களே செலுத்த வேண்டும்.
  3. இத்திட்டத்திற்கான குறைந்தபட்ச ஆரம்ப கட்டணமாக ரூ.1000/- அல்லது அதன் மடங்குகளாக ரூ.15000/- வரை ஒரு மாத சந்தாவிற்கு செலுத்தலாம்.
  4. மாதாந்திர கட்டணம் மாதத்தின் கடைசி நாளுக்கு முன் செலுத்தப்பட வேண்டும். சரியாக மாதந் தவணை செலுத்தாவிட்டால் இத்திட்டத்தின் முழுமையான பலன்களைப் பெற இயலாது. சரியாக மாதத் தவணை செலுத்தாத பட்சத்தில் சேதாரம், செய்கூலி V.A. கட்டணங்கள் மற்றும் G.S.T. வரி உண்டு.
  5. மாதாந்திர கட்டணம் அன்றைய மார்க்கெட் விலைக்கேற்ப 22 காரட் தங்க எடையாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
  6. இந்த திட்டப் பலன்களுடன் சிறப்புத் தள்ளுபடிகள் அல்லது பண்டிகைகால சலுகைகள் எதையும் இணைக்க முடியாது.
  7. இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்க நகைகளாக மட்டுமே வாங்கமுடியும். 15%க்கு மேல் மதிப்பு கூடுதல் V.A. உள்ள நகைகளுக்கு அதிகபடியான V.A. மற்றும் G.S.T. வரியை வாடிக்கையாளர்கள் செலுத்தி நகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
  8. இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 11-வது மாதம் முற்றிலும் முடிந்த பிறகு 12-ம் மாதத்திற்குள் நகைகளை பெற்றுக் கொள்ளவேண்டும்.
  9. இத்திட்டத்தில் இடையில் விலகினால் திட்டப் பலன்களை பெற இயலாது. மேலும் வாடிக்கையாளர் நகைகளுக்கான சேதாரத்தையும் மற்றும் G.S.T. வரியையும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் எக்காரணத்தைக் கொண்டும் ரொக்கமாகத் திருப்பித் தர இயலாது.
  10. இத்திட்டத்தில் தங்க நாணயங்களாகவும் வாங்கலாம். அதற்கான செய்கூலி மற்றும் G.S.T.வரியை நிறுவனமே செலுத்திவிடும்.
  11. இந்த திட்டத்திற்கு G.S.T. வரி உண்டு.
  12. முன் பணத்தை 11-மாத காலத்திற்குமேல் நீட்டிக்க முடியாது. மாதாந்திர முன் பணம் செலுத்துவதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் இந்தத் திட்டம் தள்ளுபடி செய்யப்படும். எனவே வாடிக்கையாளர் முன்பணத்தை தவறாமல் தொடர்ந்து செலுத்துவது அவசியம்.
  13. இத்திட்டத்தின் காலத்தில் ஏதேனும் ஒரு மாதம் முன்பணம் செலுத்தாத பட்சத்தில் அந்தத் திட்டம் அந்த மாதத்திலிருந்து தானாகவே நிறுத்தப்படும்.
  14. மேலும் மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின்படி வாடிக்கையாளர் இந்த திட்டத்தின் பலன்களுக்கு தகுதி பெறமாட்டார்.
  15. மாதாந்திர தவணைகளை தள்ளிவைப்பதும் அல்லது முன்கூட்டியே செலுத்தவும் முடியாது.
  16. தவணைத் தொகையினை ஆன்லைன் அல்லது நெட் பேங்கிங் அல்லது UPI மூலம் அல்லது நிறுவனத்தில் பணமாகவோ செலுத்தலாம்.
  17. இந்த சேமிப்புத் திட்டத்தில் எக்காரணம் கொண்டும் ரொக்கமாக பணம் பெற இயலாது. நகைகளாக மட்டுமே திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
  18. எந்தவொரு முன்னறிவிப்புமின்றி கம்பெனியின் சட்டத்திட்டங்களை மாற்றவோ நடைமுறைப்படுத்தவோ, சேர்க்கவோ அல்லது நீக்கவோ கம்பெனிக்கு அனைத்து உரிமையும் உண்டு.
  19. உறுப்பினர்கள் சந்தா தொகையை திட்டம் (II) இரண்டில் 11 மாதங்களும் தொடர்ச்சியாக தவணைத் தேதியில் ரொக்கமாகவோ அல்லது வங்கி பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தி வருதல் வேண்டும். ஒவ்வொரு மாதமும் சந்தா தொகையை செலுத்தியபின் அதற்குரிய இரசீதை கம்பெனியின் அதிகாரம் பெற்ற நபரிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். இரசீது இல்லாமல் உறுப்பினர் பாஸ் புத்தகத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கணக்கில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  20. முதல் தவணையை செலுத்தி உறுப்பினராக சேர்ந்த தேதியிலிருந்து அடுத்துவரும் 30 நாட்களில் அடுத்த தவணைத் தொகையை செலுத்திவிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக தவணை தேதிக்குள்ளாக தவணைக் காலங்கள் (11 மாதங்கள்) முழுமையும் சந்தா செலுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே முழுமையான ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும்.
  21. உறுப்பினர்கள் தவணைத் தொகையை முழுமையாக செலுத்தியிருந்தாலும் தவணைத் தொகையை காலமாதத்துடனம் முறையின்றியும் கட்டப்படும் தவணைகளுக்கும் காலதாமதத்திற்கும் ஏற்றாற்போல் அத்திட்டத்திற்கு உரிய ஊக்கத்தொகை மற்றும் நகைகொள்முதலுக்கு உண்டான கூடுதல் ஊக்கத்தொகையிலும் பிடித்தம் செய்யப்படும். ஊக்கத்தொகை முழுமையாக கிடைக்காது.
  22. எங்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே நகைகொள்முதல் ஊக்கத்தொகை கிடைக்கும். தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களுக்கு கொள்முதல் ஊக்கத்தொகை கிடையாது.
  23. ஊறுப்பினர்கள் தேர்வு செய்யும் பொருட்களுக்கு ஏற்றவாறு அவற்றிற்குரிய சேதாரம் மற்றும் கூலி எனப்படும் கூடுதல் மதிப்பு (Value Addition) தொகை மற்றும் G.S.T.யுடன் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  24. தவணைக்காலம் முழுமையாக பணம் செலுத்தாமல் முன்னதாக விலகும் உறுப்பினர்களுக்கு எந்தவொரு வட்டி மற்றும் ஊக்கத்தொகையும் கிடைக்காது. அவர்கள் செலுத்திய தவணைத் தொகையில் நிர்வாக செலவீனங்களுக்காக (2%) இரண்டு சதவீதம் மற்றும் 3% G.S.T. பிடித்தம் செய்துகொண்டு மீதி தொகைக்கு மட்டுமே தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
  25. இத்திட்டங்களின் கீழ் உறுப்பினர்கள் ரொக்கமாக பணம் பெற இயலாது. நகைகளாக மட்டுமே திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
  26. எந்தவொரு முன்னறிவிப்புமின்றி கம்பெனியின் சட்டதிட்டங்களை மாற்றவோ நடைமுறைப்படுத்தவோ சேர்க்கவோ அல்லது நீக்கவோ கம்பெனிக்கு அனைத்து உரிமையும் உண்டு.